நண்பர்களுக்காகவோ, உறவினர்களுக்காகவோ வங்கி ஆவணங்களில் பிணையாளியாக (Guarantor) கையெழுத்திடுபவர்களுக்கு இது ஒரு கடுமையான சட்ட எச்சரிக்கையாகும்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின் முக்கிய சாராம்சங்கள்:
முதலாவதாக, நேரடியாக பிணையாளி மீது (Guarantor) வழக்கு
அதாவது, கடன் பெற்றவர் (Principal Debtor) கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறினால், வங்கியானது முதலில் கடன் பெற்றவர் மீதுதான் வழக்குத் தொடர வேண்டும் என்ற அவசியமில்லை. நேரடியாகவே 'Guarantor' மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. (Guarantee Agreement-ல் Guarantor தனது உரிமையைத் தானாகவே விட்டுக்கொடுத்திருந்தால் வங்கிக்கு இந்த முழு உரிமையும் உண்டு).
இரண்டாவதாக "படிக்காமல் கையெழுத்துப் போட்டேன்" என்ற வாதம் செல்லாது,
"வெற்றுத் தாளில் கையெழுத்திட்டேன், ஆவணத்தின் உள்ளடக்கம் எனக்குத் தெரியாது" என்று பிணையாளிகள் கூறும் காரணங்களை நீதிமன்றம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. ஒருவர் ஆவணத்தில் கையெழுத்திடும்போது, அதன் தன்மை மற்றும் பொறுப்புகளைப் முழுமையாகப் புரிந்தே கையெழுத்திடுவதாக சட்டம் கருதும்.
மூன்றாவதாக விதிவிலக்கு யாருக்கு?
சம்பந்தப்பட்ட நபர் எழுத்தறிவில்லாதவராகவோ, பார்வையற்றவராகவோ அல்லது ஆவணத்தைப் புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருந்தாலோ மட்டுமே இந்தச் சட்டத்திலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படும்.
வழக்கின் பின்னணி:
DFCC Bank வழங்கிய கடன் தொடர்பான வழக்கில், நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கடனுக்கு உத்தரவாதம் அளித்திருந்த Vithanage Happawana என்பவருக்கு எதிராக வங்கி நேரடியாக வழக்குத் தொடர்ந்தது. இதை விசாரித்த நீதியரசர்களான யசந்த கோதாகொட, ஷிரான் குணரத்ன மற்றும் சம்பத் விஜேரத்ன (தீர்ப்பை வழங்கியவர்) ஆகியோர் அடங்கிய மூவர் கொண்ட அமர்வே இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்தத் தீர்ப்பின் மூலம் வங்கிகளின் அதிகாரம் (Guarantee Enforcement) மேலும் வலுப்பெற்றுள்ளது. எனவே, இனிமேல் யாருக்காகவாவது Guarantor ஆக கையெழுத்திடும் நபர்கள், அதில் உள்ள நிபந்தனைகளை முழுமையாக வாசித்து, மிகுந்த கவனத்துடன் முடிவெடுக்க வேண்டும்.
இத்தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்!
ஆகவே அனைவரும் இவ் விடயம் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுங்கள்.
0 Comments