அஷ்சேய்க் ஏ.எம்.றஹ்மத்துல்லாஹ் சேர் இன்றுடன் ஓய்வு...!!!
(றியாஸ் இஸ்மாயில்)
ஈரமாய் ஓர் இளைப்பாறல் "ஆத்மார்த்தம்" எனும் தொனிப் பொருளில் அட்டாளைச்சேனை யாடோவில் நடைபெற்ற சேவை நலன் பாராட்டு விழா உதவி கல்வி பணிப்பாளர் கலாநிதி ஹனீபா இஸ்மாயில் நெறிப்படுத்தலில் அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் தனுசா ராஜசேகர் தலைமையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை (23.05.2026) விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை, திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர்களான எம்.எஸ்.எஸ்.நஜீம்,ஆர்.உதயகுமார்,
அம்பாறை மாவட்ட செயலகத்தின் பிரதான பொறியியலாளர் எந்திரி ஏ.முகம்மது சாஹிர், கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜீ.பஸ்மில், ஓய்வு நிலை வலயக் கல்விப் பணிப்பாளர்களான யூ.எல்.எம்.காசீம்,ஏ.எல்.எம்.ஹாசீம், பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான திருமதி பீ.ஜிஹானா அலீம், ஏ.எம்.ஹஸீன்,எம்.எம்.சித்தி பாத்திமா,ஏ.பி.சித்தி நஸ்மியா, திருமதி எம்.மயூரன், எஸ்.அம்ஜத்கான், ஏ.எம்.நௌபர்டின்,கணக்காளர் யூ.எல்.எம்.றினோஸ், கல்முனை வலயத்தின் கணக்காளர் கே.லிங்கேஸ்வரன், அட்டாளைச்சேனை மற்றும் பொத்துவில் கோட்டக் கல்விப் பணிப்பாளர்களான எம்.எச்.எம்.றஸ்மி, கே.ஹம்சா,ஓய்வு நிலை பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.அஹமட்கியாஸ், உட்பட உதவி கல்விப்பணிப்பாளர்கள் அதிபர்கள், சேவைகள் கால ஆசிரிய ஆலோசகர்கள் வலயக் கல்வி அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள், குடும்ப உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
0 Comments