எஸ்.கிருஷ்ணா
ஹட்டன் - டிக்கோயா பகுதியில் கடந்த மே 21-ஆம் திகதி நடந்த இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணையில் மிகக் குறுகிய காலப்பகுதியில் சந்தேக நபரைக் கைது செய்து, வழக்கு ஆதாரங்களை மீட்டெடுத்த பொலிஸ் அதிகாரிகளுக்கு இன்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் இதற்குரிய நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஹட்டன் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசூரிய, ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC) சுகததாச உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டு அதிகாரிகளைப் பாராட்டினர்.