காணி உரிமை கோரி தலவாக்கலை பகுதியில் இருந்து சிறுவன் நடை பயணம் ஜனாதிபதி செயலகம் வரை சென்ற மாணவன் இடை நிறுத்தம்.
மலையக மக்களுக்கு காணி உரிமையை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி, 07 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் தலவாக்கலை நகரிலிருந்து கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகம் நோக்கி, புதன்கிழமை (20) இன்று காலை நடைபயணமொன்றை மேற் கொண்ட வேளையில் ஹட்டன் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஹட்டன் நீதி மன்றத்தில் தடை உத்தரவு பெற்று நடை பயணம் ஹட்டன் நகரில் வைத்து தடை செய்து உள்ளனர்.பிரேம்ராஜ் கார்கி என்ற இந்த சிறுவன் லிந்துலை, இந்தன்ஹோல் (Indenhaul) தோட்டத்தை சேர்ந்தவராவார். இவர் லிந்துலை சரஸ்வதி வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகிறார்.
மலையக மக்களின் காணி உரிமைகளை கோரி, ஜனாதிபதி செயலகம் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை (UNHRC) ஆகியவற்றில் மகஜர்களை கையளிப்பதற்காகவே குறித்த சிறுவன் இந்த நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்த நடை பயணம் செய்யும் சிறுவனுக்கு பலர் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஹட்டன் அதிகாரிகள் ஹட்டன் நீதி மன்றத்தில் தடை உத்தரவு பெற்று அதனை நிறைவேற்றியுள்ளனர்.
ஏழு வயது உடைய சிறுவன் நெடுந்தூர நடை பயணம் மேற் கொள்வதில் ஏற்படும் ஆபத்துகளை கருதி இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நடை பயணம் ஹட்டன் நகரில் வைத்து தடை ஏற்பட்டு உள்ளது.
மஸ்கெலியா நிருபர்.

0 Comments