ஈரான் மீது அமெரிக்கா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் பண்டர் அபாஸ் நகர் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.


ஏவுகணை ஏவுதளங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும், ஹர்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரான் கடற்படைக்கு படகுகள் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.

தற்காப்புக்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ள நிலையில் தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.

அதேவேளை, இந்த தாக்குதலால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்குமா? பேச்சுவார்த்தையில் விரிசல் ஏற்பட்டு போர் மீண்டும் தொடங்குமா? என்ற குழப்பம் நிலவி வருகிறது.