உயிர்த்த ஞாயிறு படுகொலைக்குப் பிறகு, சிறைபிடிக்கப்பட்ட பிள்ளையானைச் சந்திக்க மஹிந்த, பசில் மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு நேரில் சென்றனர்.
பிள்ளையானின் பிரத்தியேகச் செயலாளராய் இருந்த அசாத் மெளலானா பிள்ளையானிற்கும் முன்னாள் ராணுவ/ அரச புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சாலேவிற்கும் இடையில் ஏற்பட்ட சந்திப்புக்கள், சுரேஷ் சாலே பயங்கரவாதிகளை சந்தித்தது தொடர்பான விபரங்களை எல்லாம் சேனல் 4 தொலைக்காட்சிக்கு விரிவாய் சொல்லி இருந்தார்.
இப்போது பிரான்ஸில் இருக்கும் அசாத் மெளலானாவிடம் சீ ஐ டி வாக்குமூலம் பெற்றுள்ளதாக இன்று கோட்டை நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அசாத் மெளலானா எழுத்து மூலம் சாட்சி கொடுத்து இருப்பதாக சட்டமா அதிபர் திணைக்களம் சார்பாக ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தெரிவித்து இருக்கிறார்.
அதில் பிள்ளையானை பசில்-மகிந்த - நாமல் ஆகியோர் சந்தித்து கோட்டாபய வென்றதும் ஒரு வாரத்தில் பிணை கிடைக்க வழி செய்வதாய் உறுதி மொழி கொடுத்து இருந்ததாகவும் இதை அசாத் மெளலானா வாக்குமூலத்தில் சொன்னதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
அப்போது பிள்ளையானுடன் சிறையில் இருந்த பயங்கரவாதிகளுக்குப் பிணை பெற ராணுவப் புலனாய்புப் பிரிவு இரண்டு லட்சம் ரூபாய்களை செலவு செய்துள்ளதாகவும் அதற்கு சுரேஷ் சாலே வழிகாட்டியாக இருந்ததாகவும் அசாத் மெளலானா வழங்கிய வாக்குமூலத்தை இன்று நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தார் திலீப பீரிஸ்.
அசாத் மெளலானாவின் சாட்சியங்களை பிரான்ஸில் இருக்கும் இலங்கைத் தூதரகத்தில் பெற்று இருக்கிறார்கள்.அசாத் மெளலானா இந்த வழக்கின் மிக முக்கிய சாட்சிகளில் ஒன்று. தனக்கு பாதுகாப்பு வழங்கினால் இலங்கை வந்து சாட்சி சொல்வதாக அசாத் மெளலானா தெரிவித்து இருக்கிறாராம்.
ஈஸ்டர் வழக்கு ஒரு பெரும் திருப்பத்தை நோக்கிப் போய்க் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

0 Comments