இராணுவத்தின் ஏற்பாட்டில் “Beach Clean Up” கடற்கரையில் மாபெரும் சிரமதானம்
(பாறுக் ஷிஹான்)
ஜனாதிபதி செயலகத்தின் 'கிளீன் சிறிலங்கா' திட்டத்தின் ஓர் அங்கமாக 'அழகான கடற்கரை' எனும் செயற்றிட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கடற்கரை பிரதேசங்களை சிரமதானம் மூலம் துப்பரவு செய்யும் விசேட வேலைத் திட்டம் இலங்கை இராணுவத்தின் 18வது விஜயபாகு காலாட்படையணி ஏற்பாட்டில் இன்று காலை 7.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இடம்பெறவுள்ளது.
18வது விஜயபாகு காலாட்படையணி வழிநடத்தலில் கல்முனை பிரதேச செயலகம் கல்முனை மாநகர சபை பங்களிப்புடன் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பாண்டிருப்பு சாய்ந்தமருது கல்முனை வடக்கு தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதிக்கான தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தன.மாநகர சபையின் திண்மக் கழிவகற்றல் வாகனங்களும் கனரக இயந்திரங்களும் முழுமையாக பயன்படுத்தப்பட்டிருந்தன.
இந்நிகழ்வில் கரையோரப் பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா, 18வது விஜயபாகு காலாற்படைப்பிரிவின் அதிகாரிகள் மற்றும் சுகாதார உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் இவ் தூய்மைப்படுத்தல் நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.அத்துடன் பொலிஸார், முப்படையினர் மற்றும் சிவில் அமைப்பினரும் இதில் பங்குபற்றி ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்
0 Comments