பொலிஸ் தகவலின்படி, அவர் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் பயணித்துக் கொண்டிருந்தபோது பின்னால் வந்த லொறி வாகனம் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த அவர் ICUஇல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவரது கர்ப்பத்தில் இருந்த குழந்தையும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக லொறி சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கவரக்குளம் பொலிஸ் நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வாகனம் ஓட்டுபவர்கள் அவதானமாக ஓடுங்கள் என ஆயிரம் தடவை அறிவுரை கூறினாலும் விபத்துகள் நடந்துகொண்டே தான் இருக்கின்றன. இரண்டு உயிர்கள் அநியாயமாக போய்விட்டது. அவர்களின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திப்போம்.
0 Comments